சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளின் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் மாதம் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான முகவர் நிறுவனமொன்று அமைக்கப்பட உள்ளது.
இந்த நிறுவனம் நிறுவப்படுவதுடன் சர்வதேச வர்த்தகம் குறித்த முகவர் நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது.
எதிர்காலத்தில் சீனாவுடனும் இந்தியாவுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்ட ஒரே நாடாக இலங்கை காணப்படும்.
இதன் மூலம் இலங்கை பாரியளவில் பொருளாதார வளர்ச்சியை எட்டக்கூடிய சாத்தியம் உண்டு.
சிங்கப்பூருடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளதுடன் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
மேலும், இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான பிணக்குகள் பலவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, துருக்கியுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.