Breaking
Mon. Dec 23rd, 2024

மும்மண்ன முஸ்லிம் மகா வித்தியாலய விளையாட்டு மைதான பிரச்சினைக்குத் தீர்வுகிடைக்க உதவி செய்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு, பாடசாலை அபிவிருத்திச்சங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது. இந்தப் பாடசாலைக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட விளையாட்டுமைதானக் காணியை, அந்தப் பிரதேசத்தில் வாழும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் உரிமை கொண்டாடி, மாணவர்களின் விளையாட்டுப் பயிற்ச்சிக்குத் தடையாக இருந்தனர்,

கடந்த பல மாதங்களாக நடந்த இந்த இழுபறி இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டு, இரண்டு சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்திருந்தது, இந்தக் காணியின் உரிமைப்பத்திரத்தை நிரூபிக்குமாறு மாற்றுத்தரப்பினர் விடுத்த வேண்டுகோளால் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு, பாடசாலை நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் கைகூடாத நிலையில், அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் இந்த விடயம் பற்றி தாங்கள் பிரஸ்தாபித்ததாக பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர் ரியாஸ் தெரிவித்தார்.

அமைச்சர் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்தக் கலந்துரையாடிய பின்னர், உரிய அதிகாரிகளிடம் தொடர்புகளை ஏற்படுத்தித்தந்தார். அதன் பின்னர் எமது முயற்சி கைகூடி, நாங்கள் பாடசாலைக் காணிக்கான தாயுறுதியைப் பெற்றுக்கொண்டமை எமக்கு மகிழ்ச்சி தருகிறதென்று அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் எமது உண்மைத்தன்மையை நிரூபிக்க வழிவகை செய்துதந்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும், இந்த விடயத்தில் எமக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, அமைச்சருக்கும் எமக்குமிடையிலான சந்திப்பொன்றை ஏற்படுத்த உதவிய மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட  முக்கியஸ்தர் அசார்தீனுக்கும், அமைச்சரின் இணைப்பாளர் இப்ராஹீமுக்கும் பாடசாலை சமூகம் சார்பில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என அபிவிருத்திச்சங்க உறுப்பினர் ரியாஸ் குறிப்பிட்டார்.

 

By

Related Post