Breaking
Fri. Nov 29th, 2024
இலங்கையின் பல உயர்மட்ட உற்பத்தி நிறுவனங்கள் முதல் முறையாக மின்வலு தொழில்துறை முயற்சியில் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  இந்த  வெற்றியின் விளைவாக, தற்போது இரண்டாவது மின்வலு உற்பத்திக்கான முயற்சியில் துணிகரமாக செயற்படுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டுவருகின்றது என  கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.
 
கடந்த வெள்ளிக்கிழமை (26.09.2014) கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 12ஆவது மின்வலு   சர்வதேச எக்ஸ்போ கண்காட்சி- 2014இன் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் இவ் வைபவத்தில் அமைச்சர் ரிஷாட்தொடர்ந்து  தெரிவிக்கையில்:
 
இலங்கையின் மின்வலு எரிசக்தி துறைக்கு மிக முக்கியமானதாக விளங்கும்  இக்கண்காட்சி 2010ஆண்டு முதல் ஆசியா பசிபிக் CEMS Globalஅமைப்பினரின் முயற்சியால்வருடாந்த நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுகின்றது. இக்கண்காட்சி இலங்கை உட்பட இந்தோனேஷியா மற்றும் பங்காளதேஷ் ஆகிய நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது.
28SEPT2
 
இக்கண்காட்சி வர்த்தகத்தினூடான வர்த்தக (B2B)  கலந்துரையாடலுக்கு மின்வலு எரிசக்தி துறையின் அனைத்து பங்குதாரர்களை ஒரே மேடையில் கீழ்கொண்டு வரும் ஒரேயொரு நிகழ்வாக திகழ்கின்றது என ஆசியா பசிபிக் CEMS Globalஅமைப்பினரின்  நம்பிக்கை.
 
மிக வெற்றிகரமாக 27ஆம் திகதி வரை நடைபெற்ற இக்காட்சியில் 12இந்திய, சீன நிறுவனங்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட இலங்கை நிறுவனங்கள்  தங்கள் தயாரிப்புகளை காட்சிபடுத்தினர்.
 
இக்கண்காட்சி தொடர் உலக புகழ்பெற்ற தொழில்நுட்பங்ளை இலங்கை கொண்டுவருவதோடு மின்வலு, எரிசக்தி துறையை மேம்படுத்த ஏதுவாகவும் அமைகின்றது. மற்றும்   அனைத்து பங்குதாரர்களினை ஒரே கூரையின் கீழ் ஒன்று கூடுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்  மூலம் இந்த துறைக்கு ஒரு வளைப்பின்னல் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் அரிய வாய்ப்பாக உள்ளது.
 
இந்த மின்வலு துறை சர்வதேச எக்ஸ்போ கண்காட்சி – 2014ஊடாக சக்தி உருவாக்க துறையில் முதலீடுகள் ஊக்குவிக்கப்படுவதோடு இலங்கையில் சக்தி துறையில் வளமான மற்றும் சிறந்த அபிவிருத்திக்கு தேவiயான தொழினுட்ப அறிவை பெற்றுகொள்ள ஏதுவாக அமைகின்றது.
 
இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் நாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்த  எரிபொருள் மற்றும் மின்வலு சக்தி கட்டணங்களில் சிக்கல் நிலைமையினை  பரிசீலனை செய்ததோடு அண்மையில்  எரிபொருட்கள் மற்றும் மின்சார கட்டணங்கள் மீதான விலை குறைப்பினை ஏற்படுத்தியமைக்கு கைத்தொழில்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு நன்றி கூறவிரும்புகின்றேன்.
 
கடந்த ஆண்டுகளில் எமது தொழிற்சாலைகள் மின் கட்டண உயர்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமகாகஅண்மையில்எனது அமைச்சு முதல் முறையாக இலங்கையில் எரிசக்தி சேமிப்பு திட்டத்திற்கான  தொழிற்பேட்டையை தொடங்கியது. இந்த தொழிற்பேட்டை ஊடாக தேர்வு செய்யப்பட்ட உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் வருடாந்த மின்வலு   பயன்பாட்டை 20 சத வீதமாக குறைக்க வேண்டும்  என அமைச்சர் ரிஷாட் மேலும் கூறினார்.
 

கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இவ் 12ஆவது மின்வலு   சர்வதேச எக்ஸ்போ கண்காட்சி- 2014யில் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் கலந்துக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post