Breaking
Fri. Nov 22nd, 2024

அரபு வசந்தம் என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் அரசுகள் கவிழ்க்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் பொம்மை அரசுகள் நிறுவப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.

துனிசியா ,லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால்,சிரியாவில் அரபு வசந்தம் தொடங்கப்பட்டுள்ளபோதிலும், அது 5 வருடங்களாக முடிவின்றித் தொடர்கின்றது.

அந்த வரிசையில் இப்போது துருக்கியும் சிக்கியுள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் துருக்கி இப்போது இராணுவ சதிப் புரட்சி ஒன்றில் சிக்கி உடனே மீண்டுள்ளது.இராணுவப் புரட்சி ஒன்றும் துருக்கிக்குப் புதிது அல்ல.இதற்கு முன் 1960, 1971, 1980, 1997 ஆகிய ஆண்டுகளில் பல இராணுவ சதிப்புரட்சிகளை துருக்கி சந்தித்துள்ளது.

துருக்கி அரசுக்கு ஆதரவான மக்கள் இப்போதைய இராணுவப் புரட்சிக்கு எதிராகக் களமிறங்கியதாலும் துருக்கிய இராணுவத்தில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானோரே இந்தப் புரட்சியில் இறங்கியதாலும் இந்தப் புரட்சி முறியடிக்கப்பட்டது.இருந்தாலும்,அதை முறியடிப்பதற்கு 200 இற்கு மேற்பட்ட உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன.

இந்தப் புரட்சி முறியடிக்கப்பட்டபோதிலும்,துருக்கி அரசுக்கான ஆபத்து முழுமையாக நீங்கிவிடவில்லை என்பதை மறுக்க முடியாது.இராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை செய்து மீண்டுமொரு புரட்சி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் துருக்கி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த சதிக்கான காரணம் என்ன?இதன் சூத்திரதாரிகள் யார்? போன்ற கேள்விகளுக்கு சரியான பதில்கள் இப்போது கிடைக்காதபோதிலும்,துருக்கியின் எதிரிகளை அடிப்படையாக வைத்து இப்போது பல சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக,சிரியா யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு துருக்கி குறுகிய காலத்துக்குள் பல எதிரிகளை பெற்றுள்ளது.அதேபோல்,துருக்கிக்கு உள்ளேயும் நீண்ட கால எதிரிகள் இருக்கின்றனர்.இந்த எதிரிகளில் யாராவது இந்த புரட்சியின் பின்னணியில் இருக்கின்றனரா என்று சந்தேகிக்கப்படுகின்றது.

குர்திஷ் போராளிகள்

By

Related Post