Breaking
Sat. Nov 23rd, 2024

அமெ­ரிக்கக் கடற்­ப­டையின் ஈரூ­டக போக்­கு­வ­ரத்துக் கப்­ப­லான யு.எஸ்.எஸ். நியூ ஒர்­லியன்ஸ் இன்று இலங்கை வர­வுள்­ளது.

இலங்கைக் கடற்­ப­டை­யு­ட­னான இரு­த­ரப்பு உற­வு­களை அதி­க­ரிக்­கவும், அமெ­ரிக்­காவின் ஆத­ரவு மற்றும் மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் அனர்த்த மீட்பு பயிற்­சி­களை அளிப்­ப­தற்­கா­க­வுமே அமெ­ரிக்க கடற்­படைக் கப்பல் கொழும்புத் துறை­முகம் வர­வுள்­ளது.

இது­தொ­டர்­பாக இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் நேற்­று­முன்­தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,

“21ஆம் நூற்­றாண்டு, பல்­வேறு வழி­க­ளிலும் இந்­தோ -­ப­சுபிக் நூற்­றாண்­டாக இருப்­ப­தா­க வும், தமது மூலோ­பாய அமை­வி­டத்தின் மூலம் இலங்கை நல்ல நிலையில் இருப்ப­ தா­கவும், அமெ­ரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்­பிட்­டுள்ளார்.

கடல்­பா­து­காப்பு மற்றும் உறு­திப்­பாட்டில், முக்­கி­ய­மான படை­யான இலங்கை கடற்­ப­டை­யுடன் இணைந்து பணி­யாற்ற அமெ ­ரிக்க கடற்­படை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

யு.எஸ்.எஸ். நியூ ஒர்­லியன்ஸ் கப்பல் இன்று கொழும்பு வரும்­போது, யுஸ்.எய்ட் நிபு­ணர்கள் மற்றும் அமெ­ரிக்க கடற்­ப­டை யின் 13 ஆவது கடற்­படை ஆய்வுப் பிரி­வு டன், இலங்கை கடற்­ப­டையின் 200 மாலு­மி கள் இரண்டு நாட்கள் அனர்த்த மீட்பு மற்றும் மனி­தா­பி­மான உத­விகள் தொடர்­பான பயிற்­சி­களில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.

மத்­திய கிழக்கில் ஏழு மாதங்கள் கண்­கா­ணிப்பில் ஈடு­பட்­டி­ருந்த யு.எஸ்.எஸ். நியூ ஒர்­லியன்ஸ் அமெ­ரிக்க கடற்­ப­டையின் பசுபிக் கட்­ட­ளைப்­பீ­டத்தின் கீழ் இயங்கி வரு­கி­றது.

இந்த ஆண்டு இலங்­கைக்கு பயணம் மேற்­கொள்ளும் இரண்­டா­வது அமெ­ரிக்க கடற்­படைக் கப்பல் இதுவாகும். கடந்த மார்ச் மாதம் அமெரிக்கக் கடற்படையின் யு.எஸ்.எஸ். பளூரிட்ஜ் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post