கேகாலை-தம்புள்ள ஊடாக பொலன்னறுவைக்கு அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்தல விமானநிலையம் மூலம் வருடத்திற்கு மில்லியன் கணக்கான பயணிகளின் வருகையை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வத்தளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட பேதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கண்டி,கொழும்பு,அம்பாந்தோட்டை நகரங்களை மையப்படுத்தி அபிவிருத்தி வலயம் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளதாகவும் பிரமதர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மேல்மாகாணம் ழுமுவதும் பெரிய நகரங்களாக அபிவிருத்தி செய்யவுள்ளதோடு, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தையும் சீனாவின் உதவியுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 10 இலட்ச பயணிகளை வரவழைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், மயில்களின் வசிப்பிடமாகவுள்ள மத்தள விமான நிலையத்தில் மக்களின் நடமாட்டத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.