இந்திய ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுவனொருவன் 6 வருடங்கள் நாய் பால் குடித்து வளர்ந்து வருகிறான்.
ஜார்கண்ட் மாநிலம் தனபாத் பகுதியில் வசிப்பவர் சுபேந்தர் சிங், இவருடைய மனைவி பிங்கி குமாரி.
மகன் மொகித் குமார் (6). இந்த மொகித் குமார் அவனுடைய நான்கு வயது முதல் நாய் பால் குடித்து வருகிறார்.
இந்த சிறுவனின் இந்த செயலை நிறுத்த பெற்றோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் நிறுத்த முடியவில்லை. இதனால் அந்த சிறுவன் பாடசாலைக்கு அனுப்பப்படாமல் வீட்டிலேயே உள்ளான்.
இதுகுறித்து சிறுவனின் தாய் கூறும்போது, மொகித் வீட்டிலிருந்து வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு நாய் ஒன்று வந்தது. அந்த நாயின் அருகில் சென்று அவன் அந்த நாயிடம் பால் குடிக்க ஆரம்பித்தான்.
அந்த நாயும் அவனுக்கு ஒத்துழைத்தது. எப்போதெல்லாம் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவன் இந்த செயலில் ஈடுபட்டான். மொகித்துக்கு அது பிடித்திருந்தது” என்று கூறியுள்ளார்.
மேலும், அங்குள்ள இன்னொரு நாயிடம் சிறுவன் பால் குடிப்பதற்கு முற்பட்டபோது, அந்த நாய் அவனை கடித்துள்ளது.
அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம். நாய் கடிக்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த பழக்கத்தை மாற்ற எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
“நாய் பால் குடிப்பதால் ஒரு தீங்கும் ஏற்படாது, ஆனால் தொற்றுகள் பரவ வாய்ப்புகள் அதிகம்” என டாக்டர் டி.கே.சிங் தெரிவித்துள்ளார்.