பொதுபல சேனா மற்றும் மியன்மாரின் 969 கூட்டு சட்ட விரோதமானது. இந்தக் கூட் டணியின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது எனத் தெரிவித்த தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசு தேவ நாணயக்கார, இவ்விரு பெளத்த இனவாத அமைப்பு களும் இணைவதால் முஸ்லிம் கள் அச்சமடையத் தேவை யில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பெளத்த அமைப்பான பொதுபல சேனா, சர்ச்சைக்குரிய 969 அமைப்பு டன் கைகோர்த்துள்ளது. 969 அமைப் பின் நிறுவுனர் அஸின் விராது தேரர் கொழும்பில் வைத்து நேற்று முன்தி னம் ஆற்றிய உரை முஸ்லிம்களின் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் கிளப்பியுள்ளது என முஸ்லிம் பிரதிநிதி கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்ட வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
இலங்கையில் தற்போது பெளத்த இனவாத அமைப்புகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. அதில் ஓர் அங்கம்தான் பொதுபல சேனா மற்றும் 969 அமைப்பின் கூட்டாகும். இந்த அமைப்பு சட்டவிரோதமானது. பொது பல சேனா அமைப்பு சட்டவிரோதமான முறையில் செயற்படுகிறது. இந்நிலை யில் 969 என்ற அமைப்பையும் தன் னுடன் இணைத்துக்கொண்டு செயற் பட முயற்சிக்கின்றது. இந்தக் கூட்ட ணியின் முஸ்லிம் விரோத செயற் பாடுகளுக்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது.
இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் எதிர்ப்பு செயற் பாடுகள் என்று கூறிக்கொண்டு சட்டவி ரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற னர். முஸ்லிம்களை அச்சமடையச் செய்கின்றனர். இருப்பினும், இந்த பொதுபல சோனாவின் செயற்பாடு களுக்கு அரசு இனியும் இடமளிக்காது. தகுந்த நடவடிக்கையை எடுப்போம். அதனால் முஸ்லிம்கள் அச்சமடையத் தேவையில்லை. -என்றார்.