Breaking
Mon. Dec 23rd, 2024

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் வருகை இயல்பு நிலையை அடைந்துள்ளதாக, உயர் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அப் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில், யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அப் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எதுஎவ்வாறு இருப்பினும் சில நாட்களுக்கு பின்னர் கல்வி நடவடிக்கைகள் மீளவும் வழமைக்குத் திரும்பின என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post