Breaking
Sat. Sep 21st, 2024

தாம், உயர்கல்வி அமைச்சு நடத்துகின்ற மருத்துவ பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகவே இருப்பதாக மாலபே தனியார் மருத்துவக்கல்லூரியின் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

மாலபே மருத்துவக்கல்லூரியில் பயின்று வெளியேறியுள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த, மாணவர்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பெற தவறும் 82 வீதமான மாணவர்கள், அவர்களின் மருத்துவர்களாக வரும் கனவை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என தமது தனியார் கல்லூரியை எதிர்ப்போரிடம் மாணவர் தலைவர் தரிந்து ருவன்பதிரங்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த 82 வீதமானோர், மாலபே தனியார் கல்லூரி கிடைக்காது போனால் நிச்சயமாக வெளிநாட்டு மருத்துக்கல்வியை பெற்றிருப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

By

Related Post