Breaking
Wed. Apr 2nd, 2025

முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் இன்று முதல் கிலோ மீட்டருக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுய தொழில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இரண்டாவது கிலோ மீட்டரில் இருந்து இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் முதலாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வற் வரி அதிகரிப்பால் முச்சக்கர வண்டிகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால், முச்சக்கரவண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post