Breaking
Fri. Nov 15th, 2024

சீன கடன்கள் பற்றிய கடன் பங்குமுதல் பரிவர்த்தனை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஏப்ரல் மாதம் 7, 8 ஆம் ஆகிய திகதிகளில் பீஜிங் நகரில் சீன குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங், மற்றும் பிரதமர் லீ கெகியங் ஆகியோருடன் நடாத்திய கலந்துரையாடலுக்கு அமையவே அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அக்கலந்துரையாடலின்படி முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த கருத்திட்டம் பற்றி இலங்கை அரசாங்கத்துடன் தனியார் – அரச பங்காண்மை ஒன்றில் ஈடுபட விரும்புகின்ற சீன நிறுவனங்களை சீன அரசாங்கம் ஊக்குவிக்கும். அதற்கு அவசியமான நடவடிக்கை முறைகள் பற்றி சீனத் தூதுவருடன் கலந்தாலோசித்து அறிக்கையிடும் படி பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சரவைக் குழுவினால் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சருக்கும் விசேட கருத்திட்ட அமைச்சருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடல்கள் நிறைவடைந்திருப்பதுடன், அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து இரு அமைச்சர்களும் சீனத் தூதுவருடனும் இது பற்றி ஆர்வமுள்ள சீன நிறுவனங்களுடனும் மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், சுற்றுலா வலயம், பெற்றோலிய சுத்திகரிப்புத் தொகுதி, கப்பற்றுறை, இயற்கை வாயு தொழிற்சாலை, கைத்தொழில் பூங்காக்கள்; ஆகியன பற்றி 2016 ஜூலை 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று ஹம்பாந்தோட்டையில் பேச்சுவார்த்தை நடாத்தினர்.

இலங்கை அரசாங்க முகவராண்மைகளுக்கும் சீன முதலீட்டாளர்களுக்கும் இடையில் அரச – தனியார் பங்காண்மையின் கீழ் இவை அடங்கும். இதற்கு மேலதிகமாக, ஏனைய நாடுகளின் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் ஹம்பாந்தோட்டை சம்பந்தமாக வேறு முதலீட்டுப் பிரேரணைகள் பற்றி அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு பேச்சுக்களை நடாத்தி வருகிறது. இரண்டாவது பெற்றோலிய சுத்திகரிப்பு தொகுதி பற்றிய பேச்சுவார்த்தையும் இதில் அடங்கும்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய விதத்தில் ஆங்கில அச்சு ஊடகங்களில் ஒரு பகுதி இக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விடயங்களை திரிபுபடுத்தியுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்றதாக “Sunday Times” பத்திரிகை தெரிவிக்கின்ற பேச்சுவார்த்தையில் (ஹம்பாந்தோட்டை மற்றும் மத்தல: சீனாவினால் இலங்கையின் கோரிக்கை நிராகரிப்பு” (“H’tota and Mattala: China declines Lanka’s request”) என்று வெளியான செய்தி தவறானதாகும். இப்பத்திரிகையும் “Financial Times’’ பத்திரிகையும் தவறான தகவலைப் பரப்புவதில் முன்னணி வகித்துள்ளன.

By

Related Post