சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் நாடளாவிய ரீதியில் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.முதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதலாம் திகதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது.முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.உலக மக்கள்தொகையில் 10ல் ஒருவர் 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். இது 2050 ல் ஐந்தில் ஒருவராகவும், 2150ல் மூன்றில் ஒருவராகவும் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன