Breaking
Fri. Nov 15th, 2024

35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூதூர் நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் (29) திறந்து வைக்கப்பட்டது.

மூதூரிற்கு வருகை தந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மூதூர் தேர்தல் தொகுதி மக்கள் தமக்கு பெருமளவு ஆதரவு வழங்கியதாகவும் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதூத்து அவற்றை பலப்படுத்துவதற்கு தேவையான வசதி வாய்ப்பக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் மக்கள் தம்மை ஜனாதிபதியாக்க பல காரணங்கள் இருந்ததாகவும் அவற்றுள் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாத்து பலப்படுத்துவது பிரதானமானதாக அமைந்ததாகவும் தாம் ஜனாதிபதியான குறுகிய காலத்தில் சட்டம் மற்றும் நீதித்துறை எந்தளவு சுயாதீனமாக செயற்படுகின்றது என்பது பொதுமக்களுக்கு தெளிவாக புரியுமென்றும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

நல்ல மனிதர்கள் உருவாக சட்டங்கள் அவசியமானது என்றும் தமது அரசாங்கம் நாட்டு நலன், மக்கள் நலன் என்பனவற்றை கருத்திற்கொண்டு செயற்படுவதாகவும் சகலவற்றிற்கும் உயர்வாக சட்டமே முதன்மையானதாக இருக்குமென்றும் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போது ஜனாதிபதி கூறியதுடன் நீதிமன்றங்களிலே வழக்குகள் நீண்டகாலம் தேங்கி கிடக்காமல் அவை வெகு விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான விதப்புரைகளை தருமாறும் தேங்கி கிடக்கும் வழக்குகளை நிறைவு செய்ய எவ்வளவு நிதி தேவைப்படினும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுககப்படும் என்றும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

திருகோணமலையை அபிவிருத்தி செய்ய முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் மாகாண சபைககளுக்கு கல்வி செயற்பாடுகளுக்கு இம்முறை என்றுமில்லாதளவு நிதியை தமது அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் கல்வியின் மூலமே நல்ல சமூகம் கட்டியெழுப்பப்படுமென்றும் இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்காளன விஜயதாச ராஜபக்ச, ரவூப் ஹக்கீம், பிரதம நீதியரசர் கே.சிறீபவன், திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், அப்துல்லா மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், மதிப்பிற்குறிய நீதவான்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

By

Related Post