Breaking
Wed. Nov 27th, 2024

கே.பாரதிராஜா

தோற்றாலும் வெற்றிபெற்று விட்டோம் என்று எப்படிக் கூறுவது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுவிட்டதாக எதிர்க்கட்சி செய்த பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊவா மாகாண ஆளுந்தரப்பினர் பதவிப் பிரமாண நிகழ்வில் உரையாற்றியபோதே மேற்கண்ட வாறு தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ மேலும் தெரிவித்தவை வருமாறு,

வட மாகாண சபையைத் தவிர ஏனைய அனைத்து மாகாண சபைக ளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பு கைப்பற்றியுள்ளது. அதை முழுமைப்படுத்தியது நீங்கள்தான். ஊவா தேர்தல் இடம்பெற்ற காலத்தில் நான் வெளிநாட்டில் இருந்தேன். இங்கு நடைபெறும் சம்பவங்களை பத்திரிகை கள் மற்றும் இணையத்தளங்களி னூடாகப் பார்த்தேன். நாம் வெற்றி பெற்றுவிட்டோமா என்று புதுமைய டைந்தேன். காரணம் முடிவுகள் அறி விக்கப்பட்டதையடுத்து, வெளியான செய்திகள் மற்றும் செய்யப்பட்ட பிரசா ரங்களைப் பார்த்தபோது ஐக்கிய தேசி யக் கட்சி வெற்றி பெற்றுவிட்டது என்று தான் நினைத்தேன். அந்தளவுக்கு கணீப்பீடு செய்து நாம்தான் வெற்றி பெற்றோம் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்புகளை விடுத்தது.

ஒருவகையில் நான் எதிர்க்கட்சித் தலைவரின் தகைமைக்கு மதிப்பளிக்க வேண்டும். தோற்றாலும் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கூறுவதை அவரிடமிருந்து நாம் பழகிக்கொள்ள வேண்டும். அதேபோல் வெற்றிபெற்ற பின்னர் தோற்றவர்போல இருக்கவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது எமக்கு நீண்டதூரம் செல்ல முடியும்.

இன்னொரு பக்கமும் நான் புதுமையடைந்தேன். சாதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது உறுப்பினர் பதவியைத் துறந்து, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது எம்.பி. பதவியைத் துறந்து வந்து மாகாணசபைத் தேர்தலில் தோற்றதை ஊவா தேர்தலில்தான் நான் பார்ததேன் – என்றார்.

ஊவா மாகாணத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹரின் பெர்னாண்டோ எம்.பி. 173,993 வாக்குகளைப் பெற்றிருந்தார். இதேவேளை, முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ­சீந்திர ராஜபக்­ 96,619 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post