-ஆர்.ராம் –
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இந்தோனேசிய நேரப்படி 9.30 மணியளவில் ஜகர்த்தாவில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் வைத்து சந்தித்தார்.
இந்நிகழ்வில் பிரதமரின் பாரியார், இந்தோனேசிய ஜனாதிபதியின் முதற்பெண்மணி, பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம், நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச் சந்திப்பின் போது, இலங்கையின் வர்த்தக பொருளாதார கலாசார துறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை தேசிய அரசாங்கம் பொருளாதாரம் அபிவிருத்தி நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும் இந்தோனேசியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.