Breaking
Mon. Dec 23rd, 2024

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் அமைந்துள்ள தலைக்கவசத்தை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை மீதான இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் அமைந்துள்ள தலைக்கவசத்தை அணிவதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.

பின்னர், இந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து, குறித்த தடையை அமுல்படுத்துவக்கு எதிராக இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 3 மனுக்களை இன்று புதன்கிழமை(03) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலத் தடையை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

By

Related Post