Breaking
Mon. Dec 23rd, 2024

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் சவால் உலக நகைச்சுவையாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார்.

சொந்தக் கட்சியில் போட்டியிட்டு நகரசபைத் தேர்தலில் வெற்றியீட்டிக் காட்டுமாறு அனுரகுமார சவால் விடுத்திருந்தார்.

இந்த சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

கடந்த மாகாணசபை தேர்தலின் போது ஒரு ஆசனத்தையேனும் ஜே.பி.பி.யினால் வெற்றியீட்டிக்கொள்ள முடியவில்லை.

எனினும் தேசிய சுதந்திர முன்னணி ஓரு ஆசனத்தை வென்றிருந்தது.

இவ்வாறான ஓர் நிலைமையில் தேர்தலில் வெற்றியீட்டிக் காட்டுமாறு விடுக்கும் சவால் நகைப்பிற்குரியது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

By

Related Post