Breaking
Sat. Sep 21st, 2024

சர்­வ­தேச விளை­யாட்டு அரங்கில் உய­ரி­யதும் உன்­னதம் வாய்ந்­த­து­மான கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவின் 31 ஆவது அத்­தி­யாயம் பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் கோலா­கல ஆரம்ப வைப­வத்­துடன் இன்று தொடங்­கு­கின்­றது.

நான்கு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை லீப் வரு­டத்தில் நடை­பெறும் நவீன கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா, அதன் 120 வருட வர­லாற்றில் தென் அமெ­ரிக்க நாடொன்றில் அரங்­கேற்­றப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும்.

ஒற்­றுமை, நட்­பு­றவு, சகோ­த­ரத்­துவம், புரிந்­து­ணர்வு ஆகி­ய­வற்றின் சின்­ன­மாக ஒலிம்பிக் விளை­யாட்டு விழா திகழ்­கின்­றது.

இம் முறை ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 206 நாடு­களைச் சேர்ந்த 14,000க்கும் மேற்­பட்ட வீர, வீராங்­க­னைகள் 39 வகை­யான விளை­யாட்டுப் போட்­டி­களில் 306 நிக­ழச்­சி­களில் தத்­த­மது அதி உய­ரிய ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்தி தங்கப் பதக்­கங்­களை வென்­றெ­டுக்கும் முயற்­சியில் இறங்­க­வுள்­ளனர்.

ஒலிம்பிக் வர­லாற்றில் அக­திகள் ஒலிம்பிக் அணி­யினர் முதல் தட­வை­யாக பங்­கு­பற்­று­வ­துடன் கோசோவோ, தென் சூடான் ஆகிய நாடுகள் தனி­நா­டு­க­ளாக பிர­க­ட­னப்­ப­டத்­தப்­பட்ட பின்னர் பங்­கு­பற்றும் முத­லா­வது ஒலிம்பிக் இது­வாகும்.

ஆரம்ப விழா
இவ் விளை­யாட்டு விழாவின் தொடக்க விழா மரக்­கானா விளை­யாட்­ட­ரங்கில் பிரேஸில் நேரப்­படி இன்று இரவு 8.00 மணிக்கு (இலங்கை நேரப்­படி நாளை சனிக்­கி­ழமை அதி­காலை 4.30 மணிக்கு) ஆரம்­ப­மாகி 3 மணித்­தி­யா­லங்கள் நீடிக்­க­வுள்­ளது.

இந்த ஆரம்ப விழாவில் பிரேஸில் தேசத்தின் கலை, கலா­சா­ரங்­களைப் பிர­தி­ப­லிக்கும் பல்­வேறு நிகழ்ச்­சிகள் நடை­பெ­ற­வுள்­ள­துடன், இதில் பத்­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

ஆரம்­ப­வி­ழா­வின்­போது வழ­மைபோல் வீர, வீராங்­க­னை­களின் அணி­வ­குப்பு, வர­வேற்­பு­ரைகள், ஒலிம்பிக் கொடி ஏற்றல், ஒலிம்பிக் தீப­மேற்றல், வீர, வீராங்­க­னைகள் மற்றும் மத்­தி­யஸ்­தர்கள் சார்பில் சத்­திய பிர­மாணம் செய்தல் என்­பன இடம்­பெ­ற­வுள்­ளன.

புதிய உலகம் என்ற தொனிப் பொருளில் நடத்­தப்­படும் ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவின் ஆரம்ப வைபவம் 60 வய­து­டைய பணிப்­பாளர் பெர்­னாண்டோ மெரிலெஸ் என்­ப­வரால் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இவர் நான்கு தட­வைகள் அக்­க­டமி விரு­துக்கு பிரே­ரிக்­கப்­பட்­ட­வ­ராவார்.

அமைதி, சமா­தானம் ஆகி­ய­வற்றை பெரிதும் விரும்பும் பிரேஸில் மக்­களின் உணர்­வ­லை­களைப் பிர­தி­ப­லிக்கும் வகை­யிலும் நாட்டு மக்­களின் எதிர்­கால அபி­லா­ஷையைப் பிர­தி­ப­லிக்கும் வகை­யிலும் ஆரம்ப விழாவை அவர் தயா­ரித்து வழங்­க­வுள்ளார்.

ஆரம்ப விழாவில் பன்­னா­டு­களின் தலை­வர்கள், அர­சியல் பிர­மு­கர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். எனினும், பாது­காப்பு கார­ணங்­களை முன்­னிட்டு பங்­கு­பற்றும் அர­சியல் தலை­வர்கள், பிர­மு­கர்­களின் பெயர்கள் எதுவும் வெளி­யி­டப்படவில்லை.

ஒலிம்பிக் விளை­யாட்டு விழா ரியோ டி ஜெனெய்­ரோவில் நான்கு பிர­தான இடங்­களை மையப்­ப­டுத்தி நடை­பெ­ற­வுள்­ளது. பரா, கோபா­க­பானா, டியோ­டோரோ, மரக்­கானா ஆகிய வல­யங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள 34 அரங்­கு­களில் விளை­யாட்டுப் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

இந்த 34 அரங்­கு­களில் 9 அரங்­குகள் நினைவில் நீங்கா மரபு சின்­னங்­க­ளாக நிரந்­த­ர­மாக்­கப்­ப­ட­வுள்­ளன.

ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவை முன்­னிட்டு 50,000 தொண்­டர்கள் பணி­யாற்­று­வ­துடன், இலங்கை உட்­பட 200க்கும் மேற்­பட்ட நாடு­களைச் சேர்ந்த 20,000 மேற்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் இங்கு கூடி­யுள்­ளனர்.

By

Related Post