புகையிலைக்கான (tobacco) வரியை 90 சதவீதமாக உயர்த்துவது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கான பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அவ்வாறே வைத்திருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2016இன் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய கொள்ளை பிரகடனத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் காலத்திலேயே புகையிலைக்கான வரி 90 சதவீதமாக காணப்பட்டதாக, அமைச்சர் ராஜித்த இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.