Breaking
Sat. Jan 11th, 2025

அமெரிக்காவின் “நாசா” மையம் விண்வெளியில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டறிய ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். அதில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது.

அவை புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அதுபோன்று இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதுகுறித்த ஆய்வுகளை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவைகளில் உயிரினங்கள் வாழ தகுதியுள்ளதாக 216 கிரகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவற்றில் 20 கிரகங்கள் பூமியை போன்று உயிரினங்கள் வாழ மிகவும் தகுதியுள்ளவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு பூமியில் இருப்பது போன்ற மனுக்கள் மற்றும் பாதைகள் உள்ளன.

இந்த கிரகங்கள் நட்சத்திரங்களை ஒட்டியுள்ளது. அதன் மூலம் அங்கு சூரிய ஒளி, தண்ணீர் போன்றவை இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இத் தகவலை நாசா விஞ்ஞானி ரவிகுமார் கொபாரபு தெரிவித்துள்ளார்.

By

Related Post