Breaking
Mon. Dec 23rd, 2024

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற்) சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் விசேட கலந்துரையாடலில் இன்று  (8) பிற்பகல் ஈடுபடவுள்ளனர்.

குறித்த திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்பிக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சுசில் பிரேமஜயந்த, அநுரா பிரியதர்ஷன யாப்பா, சரத் அமுனுகம, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லசந்த அழகியவன்ன உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

வற் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.tm

By

Related Post