இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வாரத்தில் பாரிய தொகையான 8.7 பில்லியன் ரூபாய்பெறுமதியான கேள்விப்பத்திரங்களை பிரசுரிக்க உள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை களஞ்சியத்துக்கு எரிபொருளை கொண்டுசெல்லும் பாரிய குழாய்களை பொருத்துதல் தொடர்பான வேலைத்திட்டங்களுக்காகவே இந்த கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளன.
தற்போது வரை இந்தியா, மலேசியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் இந்த கேள்விப்பத்திர பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.
இவற்றில் குறைந்த விலைகளில் கேள்விப்பத்திரங்களை கோரும் நிறுவனத்துக்கே குழாய் பொருத்தும் அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதேவேளை குறித்த எரிபொருள் தாங்கிக்குழாய் தொகுதி 60 வருடங்கள் பழமை வாய்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.