இந்திய விமான படைக்கு சொந்தமான மாயமான விமானத்தை தேடும் பணியில் ஆராய்ச்சிக் கப்பல் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த மாதம் 22ஆம் திகதி போர்ட் பிளேயருக்கு பயணித்த ஏ.என்.32 என்ற விமானம் காணமல் போனது.
குறித்த விமானம் கடல் பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளகியிருகலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கடல் பகுதியானது, 3,500 மீட்டர் முதல் 5 ஆயிரம் மீட்டர் வரை ஆழம் இருப்பதால், விமானம் விழுந்த பகுதியைக் கண்டறிய முடியாமல் இருக்கிறது.
ஆழ்கடலில் விமானத்தைத் தேடுவதற்கு தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்தின் சாகர்நிதி, மற்றும் மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறையின் சமுத்திர ரத்னாகர் ஆகிய இரு கப்பல்களும் இரு அழைக்கப்பட்டிருந்தன.
எனினும், மோசமான காலநிலையின் காரணமாக தேடுதல் பணி நடைபெறும் பகுதிக்கு குறித்த கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மோரீஷஸ் நாட்டில் இருந்து வந்துள்ள சாகர்நிதி கப்பல் தேடும் பணி நடைபெறும் பகுதியை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரத்னாகர் கப்பல் இன்று (9) முதல் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடும் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.