Breaking
Fri. Nov 22nd, 2024
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்­கைக்கு மேல­தி­க­மாக 2500 ஹஜ் கோட்டா வழங்­கு­மாறு சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
சவூதி ஹஜ் அமைச்­ச­ருக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எழு­தி­யுள்ள கடிதம் நாளை சவூதி அரே­பி­யா­வுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது.
இக்­க­டிதம் சவூதி அரே­பி­யா­வி­லுள்ள இலங்­கையின் தூதுவர் ஊடாக சவூதி ஹஜ் அமைச்­ச­ருக்கு கைய­ளிக்­கப்­பட ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.
இலங்­கைக்கு இவ்­வ­ருடம் 2240 ஹஜ் கோட்டா சவூதி அர­சாங்­கத்தால் வழங்­கப்­பட்டு 28 ஹஜ் முக­வர்­க­ளி­னூ­டாக பயண ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லை­மை­யிலே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேல­தி­க­மாக 2500 கோட்டா வழங்­கு­மாறு சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
இவ்­வார இறு­தியில் இலங்­கைக்­கான மேல­திக ஹஜ் கோட்டா தொடர்பில் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­படும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. முஸ்லிம் சமய  விவ­கார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இலங்­கைக்கு மேல­தி­க­மாக 4000 ஹஜ் கோட்டா வழங்­கு­மாறு ஏற்­க­னவே சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
இவ்­வ­ருடம் ஹஜ் முக­வர்­களைத் தெரிவு செய்யும் நேர்­முகப் பரீட்­சையின் பின்பு 96 ஹஜ் முக­வர்கள் நிய­மனம் பெற்­றனர். இவ்­வ­ருடம் தாம் பய­ணிக்கும் ஹஜ் முக­வர்­களைத் தெரிவு செய்யும் சந்­தர்ப்பம் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டதால் மூன்றில் ஒரு பகுதி முகவர் நிலை­யங்­க­ளுக்கே யாத்­தி­ரி­கர்­களின் பதிவு கிடைத்­தது.
குறைந்­த­ளவு யாத்­தி­ரி­கர்­களைப் பெற்ற முகவர் நிலை­யங்கள் நான்கு அல்­லது ஐந்து ஒன்­றி­ணைந்து ஒரு முகவர் நிலை­யத்தின் தலை­மையின் கீழ் பயண ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வேண்­டு­கோளின் பேரில் மேல­தி­க­மாக 2500 கோட்டா கிடைக்கப் பெற்றால் அவை முக­வர்­க­ளுக்­கி­டையில் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் தெரி­வித்தார்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கோரிக்கை சவூதி ஹஜ் அமைச்­ச­ரினால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் இவ்வருடம் அதிகமானோர் ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படுமெனவும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

By

Related Post