ஆயுள்வேத மருத்துவ பட்டதாரிகளின் வேலை வாய்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அவர்களுக்கு அடுத்த மாதம் நியமனங்களை மேற்கொள்ளப் போவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் நேர்முகப் பரீட்சைகளை நடத்தி 939 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளப் போவதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். இலங்கையின் வரலாற்றில் ஆகக்கூடுதலாக ஆயுள்வேத பட்டதாரி மருத்துவர்கள் இணைத்துக் கொள்ளப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாக இருக்குமென அவர் கூறினார்.
புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் பட்டதாரிகளில் 94 பேர் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிலையங்களிலும், ஏனையோர் மாகாணசபைகளின் பொறுப்பில் இயங்கும் அமைப்புக்களிலும், நியமிக்கப்படவுள்ளனர்.