நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.தேர்தல் அறிவிக்கப்படும் நாள் முதலே சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த கால தேர்தல்களின் போது அரசாங்கம் மோசமான முறையில் தேர்தல் விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளது. அரச சொத்து பயன்பாடு, சட்டவிரோத பிரச்சாரம், அடக்குமுறைகள் என பல்வேறு வழிகளில் அரசாங்கம் விதி மீறல்களில் ஈடுபட்டது.ஜனாதிபதி தேர்தலிலும் இ;வ்வாறான விதி மீறல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, தேர்தல் தினத்தில் மட்டுமன்றி தேர்தல் அறிவிக்கப்படும் நாள் முதல் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை அவசரமாக சந்தித்தித்து இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.