ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. 2959 பரீட்சை நிலையங்களில் இந்தப்பரீட்சை நடத்தப்படவுள்ளது.
இந்தப்பரீட்சையில் 350701 மாணவர்கள் தோற்றுகின்றனர். முற்பகல் 9.30க்கு முதலாம் வினாத்தாள் பரீட்சை ஆரம்பமாகும். 75 நிமிங்களுக்கான இரண்டாம் வினாத்தாள் பரீட்சை முற்பகல் 10.45க்கு ஆரம்பமாகும்.
இந்தநிலையில் மாணவர்கள் தமது பரீட்சை சுட்டெண்களை, தமது ஆடையின் இடதுபக்கத்தில் பொறித்திருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
பரீட்சை நேரத்தில் மாணவர்களின் பெற்றோர் பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதேவேளை, பரீட்சை தொடர்பான ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின், அவற்றை 1911 அல்லது பொலிஸ் அவசர முறைப்பாட்டு இலக்கமான 119 அல்லது 0112784208 என்ற இலக்கங்களுக்கோ அல்லது 0112784537 என்ற இலக்கங்களுக்கோ அழைத்து முறையிடமுடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டபில்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார அறிவித்துள்ளார்.