Breaking
Fri. Nov 15th, 2024

சுகாதார துறைக்குள் இடம்பெறும் மோசடிகளை இந்த வருடத்திற்குள் தடுத்தால் 2000 மில்லியனுக்கு அதிகமான நிதியினை சேமிக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்து கொள்வனவு போன்ற விடயங்களில் அதிகமான பங்கு பணங்கள் கைமாறப்படுவதாகவும், குறித்த பங்குப் பணங்கள் அரச அதிகாரிகளுக்கு கிடைப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புற்றுநோயாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக இரண்டு இலட்சத்துக்கு அதிகம் பெறுமதியான மருந்துகள் கிடைத்துள்ளதாகவும், மேலதிகமான மருந்துகளுக்காக ரஸ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மருந்தினை கொள்வனவு செய்வதன் பொருட்டு நிதி சேகரிப்பதின் அவசியத்தையும் சுகாதார அமைச்சர் ராஜித வலியுறுத்தியுள்ளார்.

சகல புற்றுநோயாளர்களுக்கும் இலவசமாக மருந்துகளை வழங்கும் அரசின் வேலைத்திட்டத்திற்கு அமைய அடுத்த வருடம் 4,200 மில்லியன் நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருந்துகளுக்கான பற்றாக்குறை நிலவாத வைத்தியசாலைகளுக்கு மேலதிக மருந்துகள்பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர், வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுமானால் அதன் பொறுப்பை குறித்த வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் ஏற்கவேண்டும் என்பதோடு, அவர்களின் அக்கறையின்மை மற்றும் இயலாமைக் காரணமாகவே இந்த மருந்துப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post