Breaking
Fri. Nov 15th, 2024

பாதுகாப்பற்ற முறையில் உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 3212 வர்த்தக நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையிலேயே இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்   குறிப்பிட்டார்.

இது தொடர்பில்  அவர் மேலும் குறிப்பிடுகையில்

தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 3212 வர்த்தக நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின்போது   137 வர்த்தகர்கள் அசுத்தமாக பொது மக்களுக்கு உணவு வகைகளை விற்பனை செய்தமை , தமது வியாபார நிறுவனத்தை சுத்தமாக வைத்திருக்காமை , பழைய உணவுகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  அந்தவகையில்  குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது டிஜிட்டல் வர்ண குறியீடு இல்லாத குளிர்பான போத்தல்கள் ஒரு தொகுதியும் கைப்பற்றப்பட்டுள்ளது. . எதிர்வரும் காலங்களில் உணவு பாதுகாப்பு தொடர்பில் கடுமையான சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

By

Related Post