Breaking
Fri. Nov 15th, 2024

பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரு மாண­வக்­ குழுக்­க­ளி­டையே ஏற்­பட்ட மோதலில் காய­ம­டைந்த ஐவர் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைபெற்று வரு­கின்றனர்.

நேற்று முன்தினம் (22) இரவு இடம்­பெற்ற இந்த மோதல் குறித்து மத்­திய மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஏ.டி.எஸ். குண­வர்­த­னவின் உத்­த­ர­வுக்கு அமைய பேரா­தனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் விஷேட விசா­ரணை ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளது.

காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் உள்ள மாண­வர்­க­ளி­டமும் பேரா­தனை பல்­க­லையின் இணைந்த சுகா­தார விஞ்­ஞான பீடத்தின் முதலாம் தர மாண­வர்கள் மற்றும் இரண்டாம் வருட மாண­வர்கள் பலரிடமும் இது குறித்து வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் மேலும் பல­ரிடம் வாக்கு மூலம் பெறப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பேரா­தனை பொலிஸார் தெரி­வித்­தனர்.

எவ்­வா­றா­யினும் நேற்று மாலை வரை பொலிஸார் முன்­னெ­டுத்த ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களின் பிர­காரம், அண்­மையில் இடம்­பெற்ற மாணவர் கூட்டம் ஒன்றில் மாண­வர்கள் சிலர் கலந்­து­கொள்­ளாமை தொடர்பில் இணைந்த சுகா­தார விஞ்­ஞான பீடத்தின் முதலாம் தர மாண­வர்கள் மற்றும் இரண்டாம் வருட மாண­வர்­க­ளி­டையே கார­சா­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்கள் நேற்று முன் தினம் இரவு இடம்பெற்றுள்ளன. இந்த வாய்த்­தர்க்­க­ம் மோதலில் முடி­வ­டைந்­துள்­ள­தாக முதல் கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளன.

இந் நிலை­யி­லேயெ இந்த மோதலால் காய­ம­டைந்த 5 மாண­வர்கள் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைபெற்று வரு­வ­தா­கவும் அவர்­களின் நிலைமை கவலைக்கிட­மக இல்லை எனவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

தாக்கு­த­லுக்குள்­ளான மாண­வர்­களால் பேரா­தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதேசத்துக்கு பொறுப்பான் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

By

Related Post