நாடு முழுவதும் 1600 தபால் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் ஊழியர்களின் பற்றாக்குறையினால் தபால் பகிர்ந்தளிப்பதில் பாரிய சிக்கல் கடந்த காலங்களில் நிலவியதாக தபால் அதிபர் ரோஹண அபேவர்தன தெரிவித்தார்.
சிரேஷ்ட உத்தியோகத்தர்களை கடமையில் இணைத்து கொள்வதற்கான பரீட்சை அண்மையில் நடைப்பெற்றதுடன் அந்தப்பரீட்சையில் சித்தியடைந்த 150 பேர் சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, 750 தபால் ஊழியர்களை கடமையில் இணைத்து கொள்ளவுள்ளதாகவும் 350 பேர் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரோஹண அபேவர்தன மேலும் தெரிவித்தார்.