Breaking
Tue. Nov 26th, 2024
மியன்­மாரின் மதத் தலைவர் அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான விட­ய­மல்ல. இலங்­கைக்குள் குழப்­பங்கள் ஏற்­படும் வாய்ப்­புக்கள் இல்­லை­யென தெரி­வித்த இராணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய தெளஹித் ஜமாஅத் அமைப்­பிற்கு இலங்கை வர அனு­மதி உண்­டெனின் விராது தேரர் ஏன் வரக்­கூ­டாது எனவும் கேள்வி எழுப்­பினார்.
மியன்­மாரின் 969 அமைப்பின் தலைவர் அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லா­னதா என்று வின­விய போதே பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
 மியன்­மாரின் 969 அமைப்பின் தலைவர் அசின் விராது தேரரோ அல்­லது அவ் அமைப்போ தீவி­ர­வாத அமைப்­பல்ல. அதேபோல் 969 என்­பது பௌத்த சிந்­த­னை­க­ளையும் பௌத்த கொள்­கை­க­ளையும் அடை­யா­ள­மாகக் கொண்ட அமைப்­பாகும். எனவே இவர்­களின் வருகை இலங்­கையின் பாது­காப்பில் அச்­சுறுத்தல் அல்­லது சிறு­பான்மை மக்கள் மீதான அச்­சத்­தினை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­தொன்­றல்ல. அத்­தோடு அஹிம்சை வழி­யி­லேயே அவரின் செயற்­பா­டுகள் அனைத்தும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான பௌத்த தலை­வர்­களை இலங்­கைக்கு அழைத்­தி­ருப்­பது நாட்­டிற்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யாது.
மேற்­கத்­தேய ஊட­கங்கள் இது­வ­ரையும் இவ் 969 அமைப்­பி­னையும் தீவி­ர­வாத அமைப்­பாக சித்­த­ிரிக்­கின்­றனர். ஆயினும் மேற்குலக ஊட­கங்­களின் பின்­ன­ணியில் யார் செயற்­ப­டு­கின்­றனர் என்­ப­தையும் இவர்­களின் நோக்கம் எது என்­ப­த­னையும் நாம் அறிந்­துள்­ளதே. எனவே இவ்­வி­மர்­ச­னங்­களை கருத்திற் கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை. மியன்­மாரில் பௌத்த மதத்­திற்கு எதி­ரான வகையில் ஒரு சில முஸ்லிம் அமைப்­புகள் செயற்­பட்ட போது அதனை தடுக்கும் வகையில் செயற்­பட்ட அமைப்பே தவிர சாதா­ரண முஸ்­லிம்­களை இவர்கள் எதிர்க்­க­வில்லை என்­பதே உண்மை.
மேலும், தென் இந்­தி­யாவின் அமைப்­பாக செயற்­படும் தௌஹித் ஜமா அத் அமைப்பின் பிர­தி­நிதி கடந்த வாரம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டி­ருந்தார். அதேபோல் தௌஹித் ஜமா அத் அமைப்­பினர் பள்ளி வாசல்­க­ளிலும் ஏனைய பகு­தி­க­ளிலும் மத பிர­சா­ரங்­களை செய்­கின்­றனர். எனவே, இவை அனைத்து செயற்­பா­டு­க­ளுக்கும் இலங்கை அரசு இட­ம­ளித்­தி­ருக்­கின்­றது. தௌஹித் ஜமா அத் அமைப்பு என்­பது பிரி­வி­னை­வாத அமைப்­பென்­பதை அனை­வரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர்கள் இலங்கை வரமுடியுமெனின் ஏன் மியன்மாரின் மதத் தலைவர் அசின் விராது தேரர் இங்கு வரக்கூடாது. அசின் விராது தேரர் இங்கு வர கூடிய உரிமைகளும் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்

Related Post