Breaking
Mon. Dec 23rd, 2024
25 இலட்சம் ரூபா பெறுமதியான 540 சீனி மூடைகள் மாயமாகியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.களனியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றே இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்து ள்ளது.
குறித்த முறைப்பாட்டில், இறக்குமதி  செய்யப்பட்ட 540 சீனி மூடைகளை போக்குவரத்து ஒப்பந்த நிறுவனம் ஒன்றிடம் வழங்கிய போதிலும், அது இன்னும் தமது நிறுவனத்திற்கு வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்த நிறுவனத்திடம் போக்குவரத்து உரிமையை பெற்ற, மற்றுமொரு உப ஒப்பந்த நிறுவனத்தினால் அந்த சீனி மூடை கொள்கலன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சீனி மூடைகளைக் கொண்ட கொள்கலன், கொழும்பு துறைமுகத்திலிருந்து, கடந்த ஓகஸ்ட் 26 ஆம் திகதி அந்நிறுவனத்தால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, பின்னர் பேலியகொட, நுகே வீதியில் தனியாக விட்டுச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முத்திரையிடப்பட்டிருந்த குறித்த கொள்கலனின் முத்திரையும் உடைக்க ப்பட்டு ள்ளதோடு, கொள்கலன் வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதி தப்பிச் சென்றுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post