Breaking
Tue. Nov 26th, 2024
நாட்டில் பொலிஸாரை விடவும் நாம் சிறந்த முறையில் சேவையாற்றுவோம் என மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில், வெல்லம்பிட்டிய சேதவத்த சித்தார்த்த வித்தியாலயத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தவிர்ப்பு நிவாரண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்வோர் மற்றும் செய்யும் இடங்கள் பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியும் என குறிப்பிட்டேன்.
யார் விற்பனை செய்கின்றார்கள் என்று ஹிருணிகா சொன்னால், அவர்களை நான் கைது செய்கின்றேன் என்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன.
அப்படியானால் அவர்கள் பொலிஸ் அதிகாரிகளாக இருப்பதில் அர்த்தமில்லை.
நான் அடையாளம் காட்டித் தான் குற்றவாளிகளை பிடிக்க வேண்டுமாயின், நான் பொலிஸ் சீருடை அணிந்து கொள்கின்றேன். அஜித் ரோஹன அரசியல்வாதியாக மாறிக் கொள்ள வேண்டியதுதான்.
பொலிஸாரின் கடமைகளை நாம் செய்தால் அவர்களை விடவும் சிறந்த முறையில் அவற்றைச் செய்வோம்.
பொலிஸார் கடமைகளை சிறந்த முறையில் ஆற்ற வேண்டும். அதற்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாறாக என்னிடம் யார் போதைப் பொருள் விற்பனை செய்கின்றார்கள் என் கேள்வி எழுப்ப வேண்டாம்.
நான் பேதைப் பொருள் விற்பனை செய்யவுமில்லை, விநியோகம் செய்யவுமில்லை என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

Related Post