Breaking
Sun. Dec 22nd, 2024

துபாயின் அமீ­ரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் துபா­யி­லுள்ள அரச அலு­வ­ல­கங்­க­ளுக்கு மேற்­கொண்ட திடீர் விஜ­யத்­தின்­போது, உயர் அதி­கா­ரிகள் பலர் அலு­வ­லங்­களில் இல்­லா­தி­ருப்­பதைக் கண்­ட­றிந்­துள்ளார்.

இதை­ய­டுத்து 9 சிரேஷ்ட அதி­கா­ரிகள் உட்­பட அதி­கா­ரிகள் பலரை பணி­ய­லி­ருந்து ஓய்வு பெறு­மாறு அவர் உத்­த­ர­விட்­டுள்ளார்.

65 வய­தான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட், ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் உப ஜனா­தி­ப­தி­யா­கவும் பிர­த­ம­ரா­கவும் பதவி வகிப்­ப­துடன்,  துபாயின் அமீ­ரா­கவும் (ஆட்­சி­யாளர்) விளங்­கு­கிறார்.

கடந்த ஞாயி­றன்று அவர் துபா­யி­லுள்ள அரச அலு­வ­ல­கங்கள் பல­வற்­றுக்கு அவர் திடீர் விஜ­யங்­களை மேற்­கொண்டார். காலை 7.30 மணிக்கு இப்­ப­ய­ணத்தை ஆர­ம­பித்­தார்தார்.

துபாய் மாந­கர சபை, துபாய் சர்­வ­தேச விமான நிலையம், காணி திணைக்­களம், பொரு­ளா­தார அபி­வி­ருத்தித் திணைக்­களம் ஆகி­ய­வற்­றக்கு அவர் விஜயம் மேற்­கொண்டார்.

இவ்­வி­ஜ­யத்தின் போது பல அலு­வ­ல­கங்­களில், உயர் அதி­கா­ரிகள் கட­மைக்கு சமுகம் அளிக்­காதை அவர் அறிந்­து­கொண்டார்.

அதை­ய­டுத்து 9 சிரேஷ்ட அதி­கா­ரிகள் உட்­பட பலரை பணி­யி­லி­ருந்து ஓய்வு பெறு­மாறு அவர் உத்­த­ர­விட்டார்.

மேற்­படி 9 அதி­கா­ரி­களின் சேவைக்­காக திங்­கட்­கி­ழமை ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம்  நன்றி தெரி­வித்தார்.

எனினும், பொதுமக்களுக்கு உயர்தரமான சேவை வழங்குவதற்காக இளம் தலைவர்கள் பணிகளை பொறுப்பேற்க வேண்டும் என தான் விரும்புவதாக அவர் கூறினார்.

By

Related Post