Breaking
Fri. Nov 22nd, 2024

கொழும்பு பாதுகாப்பு மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) ஆரம்பமாகியுள்ளது.

வலயம் மற்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகளை அடையாளங்கண்டு அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இன்று ஆரம்பமாகும் இந்த மாநாடு எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

குறித்த மாநாட்டில், உள்நாட்டு மற்றும் வௌிநாடுகளை சேர்ந்த புத்திஜீவகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் பாதுகாப்பு மாநாடு இராணுவ தளபதி லுத்தினல் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய இந்த வருடம் முதல் கொழும்பு பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப்படவுள்ளது.

இந்த முறை மாநாட்டில் 800 ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியுள்ளதுடன் அவர்களில் 71 நாடுகளை சேர்ந்த 125 பேர் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் புத்திஜீவிகள் மற்றும் ஆய்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

By

Related Post