-ஒலுவில் கமால் அஹ்மட் –
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை -31- ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒலுவில் கடலரிப்பு விடயம் தொடர்பாக அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்தார்.
அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்த அர்ஜூன ரணதுங்க ஒலுவில் கடலரிப்பு விவகாரத்தினை தடுக்க அமைச்சர் றிசாத் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இதுகுறித்து என்னுடனும், எனது அதிகாரிகளுடனும் பலதடவை உரையாடினார். அந்த மக்கள் படும் அவலங்களை என்னிடம் ஆதாரங்களாக சமர்ப்பித்தார்
அதன் பயனாக நாம் துரிதமாக செயற்பட்டு இந்த அமைச்சரவை பத்திரத்தை இப்போது சமர்ப்பிக்கிறேன் என்றார்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் றிசாத்தை நோக்கி தனது பார்வையை செலுத்தியுள்ளார்.
அமைச்சர் றிசாத் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அவர்களே ஒலுவில் கடலரிப்பினால் குறித்த பிரதேச முஸ்லிம்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் எனது வேண்டுகேபளை செவிமடுத்து உடனடியாக செயற்பட்ட அர்ஜுனா ரணதுங்கவிற்கு ஒலுவில் மக்களின் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.
இதனையடுத்து ஒலுவில் கடலரிப்பை தடுக்கு முகமாக தடுப்புக் கற்களை போடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதுவே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் நடைபெற்றது.