Breaking
Fri. Jan 17th, 2025

நாடாளுமன்றத்தில் குண்டர்கள் இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தமது கொள்கைகள் மிக தெளிவாக உள்ளன. நாங்கள் முன்வைக்கும் கொள்கைகளை ஏற்க தயாராக இருந்தால், கட்சி, நிறம், சின்னம் அல்லது இன என்ற வேறுபாடு இல்லாமல் பொதுபல சேனா ஆதரவளிக்கும்.

பொதுபல சேனாவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கொள்கைகள் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பை அனுப்பி வைக்க உள்ளது.

பொதுபல சேனாவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு ஏற்கனவே அறிவித்தது போல் 5 மில்லியன் வாக்குகளை தமது அமைப்பு உறுதி செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பை சிலர் தீவிரவாத அமைப்பு என்று கூறினாலும் எமது அமைப்புக்கு பெரும்பான்மையான மக்களின் ஆதரவு உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் எமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தனியான வேட்பாளரை நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்

குண்டர்கள் நாடாளுமன்றத்தில் பதவிகளில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நாட்டின் அடுத்த தலைவராக வர வேண்டியவருக்கு உண்மையான படித்த ஆளுமை இருக்க வேண்டும்

அவர், சிங்கள பெரும்பான்மை மக்களின் உரிமைகள் மீறப்பட மாட்டாது என்பதை உறுதிசெய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post