மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் நாட்டுக்கு அழைக்கப்பட உள்ளார்.
அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாடு திரும்பமாறு உயர்ஸ்தானிகர் இப்ராஹிமிற்கு வெளிவிவகார அமைச்சு நேற்று (6) அறிவித்துள்ளது.
இலங்கைக்கு மீள அழைக்கப்பட உள்ள உயர்ஸ்தானிகரின் பதவி தொடர்பில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜதந்திரி ஒருவர் மீது தக்குதல் நடத்துவது பாரதூரமான நிலைமை எனவும் மலேசியாவில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முடிக்கப்படும் வரையில் உயர்ஸ்தானிகர் இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.