வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை, எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்துடன் சமர்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
11 வீதமாகக் காணப்படும் வற் வரியை 15 வீதமாக உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.எனினும், உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தின் அடிப்படையில் அரசாங்கம் குறித்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது.
அமைச்சரவையின் அனுமதியின்றி சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.
இதனைத் தொடர்ந்து புதிய வற் வரி அதிகரிப்பு குறித்த உத்தேச யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
பின்னர் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரையில் இந்த சட்டத்தை சமர்ப்பிப்பதில்லை என அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் தற்போது, வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனையை தனியான ஓர் சட்டமாக கொண்டு வராது வரவு செலவுத்திட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளடக்க அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.
இதன்படி, வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போதே வற் வரி அதிகரிப்பு குறித்தும் விவாதம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.