ஹாசிப் யாஸீன்
சாய்ந்தமருது பிரதேசத்தில் ஹஜ்ஜூப் பெருநாள் வெகுவிமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. சாய்ந்தமருதில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை பள்ளிவாசல்களிலும், கடற்கரை முன்றலிலும் இடம்பெற்றன.
சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பிரதான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது.
ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கத்தினையும் மௌலவி முபாறக் நிகழ்த்தினர். இதில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இதேசமயம் சாய்ந்தமருது கடற்கரை முன்றலில் ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் இலங்கை தௌஹீத் ஜமாஅத் ஆகியோரின் ஏற்பாட்டில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.