கடந்த 2014-ம் ஆண்டு மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு சென்ற MH370 விமானம் மாயமானது. இதில், 5 இந்தியர்கள் உள்பட 239 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானத்தின் பாகங்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் அவ்வப்போது கிடைத்து வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர் பிளைன் ஜிப்சன் என்பவர் விமானத்தின் 5 பாகங்களை கண்டுபிடித்து அவற்றை ஆஸ்திரேலியாவில் உள்ள போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பிடம் வழங்கி உள்ளார்.
இந்த இடிபாடுகளை ஆய்வு செய்த ஜிப்சன் விமானம் தீப்பிடித்து எரிந்து விழுந்தது போன்று தென்படுவதாக கூறினார். தனக்கு கிடைத்த பாகங்களில் தீப்பிடித்ததற்கான அடையாளங்கள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, விமானம் நடுவானில் பறந்த போதே அது தீப்பிடித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விமானம் தானாக தீப்பிடித்ததா? அல்லது குண்டு வெடிப்பு சதி வேலை காரணமாக தீப்பிடித்ததா? என்பது தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.