Breaking
Mon. Dec 23rd, 2024

பாசிக்குடா கடலில் குளிக்க சென்று நீரில் மூழ்கி  காணாமல்போன இரு சகோதர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாசிக்குடா கடலில் நேற்று மாலை குளிக்க சென்ற ஐந்து இளைஞர்களில் ஒருவரைத் தவிர மற்றைய நான்கு பேரும் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் நீரில் அடித்து செல்வதை அவதானித்த கரையில் நின்ற நண்பன்  கூச்சலிட்டு ஊ

ஏனையவர்களிடம் உதவி கேட்டுள்ளான்.

இதன்போது பிரதேசத்தின் மீனவர்களின் உதவியுடன் இரண்டு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டு வாவழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஏ.ரஜிதன் வயது (16) , கே.டிலக்சுமனன் வயது (16) ஆகியோர்களே மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களை தேடும் பணியினை கல்குடா கடற்படையினர் மற்றும் பிரதேசத்தின் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அது ச.சதீஸ்குமாரென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மற்றயவரான ச.சுரேஸ் என்பவரது சடலத்தினை மீட்பதற்கான தேடும் பணிகள் தொடர்வதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

By

Related Post