ஆயுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தைகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை ஆரம்பித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்நிலையில், சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை நிகழ்த்தியுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை 2017ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் உருவாகி 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கை மக்களிடம் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்துடான வாழ்க்கை முறையினை மாற்றியுள்ளது.
அத்துடன், மக்களுக்கு வேண்டிய சுகந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையினை உலகில் உள்ள மிகவும் சந்தோசமான நாடுகளினுள் ஒன்றாக மாற்றி மக்களுக்கு கையளிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளோம்.
இதேவேளை, இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக இக் கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.