Breaking
Mon. Nov 25th, 2024

அநு­ரா­த­புரம் நகரில் அமைந்­துள்ள களுத்­துறை பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்லிம் வியா­பாரி ஒரு­வ­ருக்கு சொந்­த­மான தற்­கா­லிக வியா­பார கொட்­ட­கைக்கு (Sale Centre) நேற்று முன்­தினம் அதி­காலை இனந் தெரி­யாத நபர்­களால் தீ வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அநு­ரா­த­புரம் பொலிசார் தெரி­வித்­தனர்.

“லாஸ்ட் சான்ஸ் ” (Last Chance )என்று பெய­ரி­டப்­பட்ட இந்த வியா­பார நிலை­யத்தில் பெறு­மதி வாய்ந்த வர்ண விளக்­குகள் உள்­ளிட்ட பெறு­ம­தி­வாய்ந்த சமையல் உப­க­ர­ணங்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தீயினால் முற்­றாக எரிந்து சாம்­ப­ரா­கி­யுள்ள இவ் வியா­பார நிலை­யத்தின் பெறுமதி சுமார் ஒன்­றரை கோடி ரூபா என அதன் உரி­மை­யாளர் தெரி­வித்தார்.

குறித்த வியா­பார நிலை­யத்தை அவ்­வி­டத்தில் நடத்­து­வதை விரும்­பாத சக்­தி­களே இதற்கு தீ வைத்­தி­ருக்­கலாம் என தாம் சந்­தே­கிப்­ப­தாகக் குறிப்­பிட்ட அவர், இது தொடர்பில் அரு­கி­லுள்ள வியா­பார நிலை­யங்­களின் சி.சி.ரி.வி. கமெ­ராக்­களை பரி­சோ­தித்து குற்­ற­வா­ளி­களை கண்­ட­றிய பொலிசார் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

குறித்த தற்­கா­லிக வியா­பார நிலை­யத்தை (Sale Centre) அவ்­வி­டத்தில் நடத்திச் செல்ல மூன்று மாத காலத்­திற்கு அனு­மதி பெறப்­பட்­டி­ருந்­த­தா­கவும் இரு மாத கால­மாக இந் நிலையம் இயங்கி வந்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொர்பில் அனு­ரா­த­புரம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் பொலிசார் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

மேற்­படி களுத்­துறை பிர­தேச வர்த்­த­க­ருக்குச் சொந்­த­மான அதே பெயரில் பெப்பிலி­யான பிர­தே­சத்தில் இயங்கும் வியா­பார நிலையம் ஒன்­றுக்கும் சில வரு­டங்­க­ளுக்கு இன­வா­திகள் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

By

Related Post