சண்டே லீடர் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க எவ்வாறான முறையில் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தம் வெளியிடாத துப்பாக்கி மூலம் கொலை செய்யப்பட்டாரா அல்லது ஸ்பிரிங் ஒன்றினால் வெளியாகும் தோட்டாவை கொண்ட சத்தம் வெளியிடப்படாத துப்பாக்கியால் சுடப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கொலை தொடர்பில் காணப்பட்ட இருவேறு மருத்துவ கருத்து தொடர்பில் உண்மை தகவலை பெற்றுக் கொள்வதற்காக லசந்த விக்ரமதுங்கவின் சடலம் எதிர்வரும் 27ஆம் திகதி தோண்டி எடுக்கப்படவுள்ளது.
பின்னர் கடந்த 3ஆம் திகதியிலிருந்து 24ஆம் திகதி வரை திஸ்ஸ மயானத்தில் லசந்தவின் உடல் தகனம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு பொலிஸாரின் ஊடாக விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த அரசாங்கத்தின் போது ஸ்பிரிங் தொழில்நுட்பத்திலான 8 துப்பாக்கிகள் ஜேர்மனில் இருந்து இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பில் குற்றப் புலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தலைமையக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த துப்பாக்கிகள் இந்த பாதுகாப்பு பிரிவினால் பயன்படுத்தப்படுவதென குற்ற விசாரணை பிரிவினர் இந்த நாட்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை லசந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அதே துப்பாக்கியா ரகர் வீரர் வசீம் தாஜுடீனின் கொலைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதென குற்ற விசாரணை பிரிவினர் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 27ஆம் திகதி ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதன் பின்னர் கடந்த 7 வருடமாக மறைக்கப்பட்டிருந்த மர்ம சம்பவத்திற்கான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்படும் என குற்ற விசாரணை பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.