Breaking
Sun. Dec 22nd, 2024
ஐ.நா. பொது சபை கூட்டத் தொடரில் பேசிய பாலஸ்தீனம் அதிபர் அப்பாஸ், போரின் போது தங்களிடம் இருந்து ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கூட்டத் தொடரில் பேசிய பாலஸ்தீனம் அதிபர் மஹ்மவுத் அப்பாஸ், போரின் போதுதங்களிடம் இருந்து எடுத்துக் கொண்ட நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் பேசுகையில்:-
1917-ம் ஆண்டின் பல்போர் பிரகடனத்திற்காக இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டும். பாலஸ்தீனம் அமைதிக்காக நீண்ட காலமாக போராடி வருகிறது. ஒரு போதும் தற்காலிக தீர்வை ஏற்றுக் கொள்ள முடியாது.
பல ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் மீது அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அமைதி, நிலைத் தன்மை மற்றும் சகவாழ்வு ஆகியவற்றிற்கு உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து எங்கள் மக்களுக்கு சுதந்திரம் அளிக்காத வரை பாலஸ்தீன பகுதியில் நடைபெற்று வரும் தீவிரவாத மற்றும் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாது.
எங்கள் கரங்கள் தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட தயாராகவே உள்ளது.
இவ்வாறு கூறினார்.

By

Related Post