Breaking
Sun. Dec 22nd, 2024
ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியில் இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.
வியட்னாமில் நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியிலே இலங்கை அணி பதக்கத்தை கைப்பற்றியது.
இறுதிப் போட்டியில் 43ற்கு31 என்ற அடிப்படையில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. தாய்லாந்து அணி 2ம் இடத்தைப் பெற்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆடவருக்கான கபடி போட்டியிலும் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்கப் பெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் இதுவரை 16தங்கப்பதக்கங்களையும், 16 வெள்ளிப்பதக்கங்களையும், 22வெண்கலப்பதக்கங்களையும் வென்று வியட்னாம் முன்னிலை வகிக்கின்றது. 16 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள தாய்லாந்து இரண்டாம் இடத்திலுள்ளது. 6 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள சீனா மூன்றாம் இடத்தில் உள்ளது.

By

Related Post