வட மாகாணத்தின் மன்னார் மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேசங்களில் 220 வீடுகளை நிர்மாணிக்க பாகிஸ்தான் அரசாங்கம் முன்வந்துள்ளது.
யுத்தகம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை வழங்கியுள்ளது. இதற்கான இலங்கை அரசாங்கத்திடம் காசோலை நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காசீம் குரைஷி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் இந்த காசோலையினை கையளித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளிற்கமையவ இந்த நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்திய அரசாங்கத்திகால் 50,000 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.